/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோலர் ஸ்கேட்டிங் போட்டி; பிரன்ட்லைன் மாணவர் 'தங்கம்'
/
ரோலர் ஸ்கேட்டிங் போட்டி; பிரன்ட்லைன் மாணவர் 'தங்கம்'
ரோலர் ஸ்கேட்டிங் போட்டி; பிரன்ட்லைன் மாணவர் 'தங்கம்'
ரோலர் ஸ்கேட்டிங் போட்டி; பிரன்ட்லைன் மாணவர் 'தங்கம்'
ADDED : செப் 24, 2025 12:11 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் - 2025 போட்டி கடந்த 14ம் தேதி பல்லடம் வெலாசிட்டி இன்டர்நேஷனல் ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் நடந்தது.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் குவாட் - 1, லேப் ரோட் ரேஸ், 500 மீ. ரிங் ரேஸ், 3 ஆயிரம் மீ., ரோட் ரேஸ் ஆகிய மூன்று பிரிவுகளிலும் திருப்பூர் பிரன்ட்லைன் பள்ளி, 10ம் வகுப்பு மாணவர் பிரணவ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
இதனால், மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவரையும், அதற்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்களையும் பள்ளியின் முதல்வர் லாவண்யா, தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி, தலைமையாசிரியர் கமலாம்பாள் ஆகியோர் பாராட்டினர்.