ADDED : பிப் 15, 2025 07:03 AM

அவிநாசி; அன்னுார் டவுன் ரோட்டரி சார்பில், 100வது ரோட்டரி சங்கம் கருவலுாரில் திறக்கப்பட்டது.
ரோட்டரி மாவட்டம் எண்: 3203 சார்பில், அன்னுார் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில், அவிநாசி அருகே கருவலுாரில், 100வது ரோட்டரி சங்க துவக்க விழா, அனந்தகிரி ரத்தினமூர்த்தி மகாலில் நடைபெற்றது. ரோட்டரி சங்க புதிய கவுரவ தலைவராக விநாயகமூர்த்தி, தலைவர் வேலுசாமி, செயலாளர் இளங்கோவன், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ரோட்டரி மாவட்ட கவர்னர் சுரேஷ்பாபு தலைமையில், ரோட்டரி மாவட்ட கவர்னர் (2026-27) பூபதி, கவுரவ விருந்தினராக பங்கேற்றனர்.
விழாவில், அன்னுார் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் நந்தகுமார், செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் லட்சுமணமூர்த்தி மற்றும் வரதராஜ் ஆதித்யன் முத்துக்குமார் ஆகியோர் துவக்க விழாவை ஒருங்கிணைத்தனர்.