/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டோர மின் கம்பம்: விபத்து ஏற்படும் அபாயம்
/
ரோட்டோர மின் கம்பம்: விபத்து ஏற்படும் அபாயம்
ADDED : ஜன 30, 2024 12:03 AM

பொங்கலுார்:பொங்கலுார் அருகே ரோட்டோரம் உள்ள மின் கம்பத்தால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பல்லடம் - தாராபுரம் ரோடு சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. பொங்கலுார் - கள்ளிப்பாளையம் அருகே ரோட்டோரத்தில் உள்ள மின்கம்பம் சாயாமல் இருப்பதற்காக நிலத்தில் நடப்பட்டுள்ள கம்பி மாற்றி நடப்படாமல் உள்ளது.
அந்த மின் கம்பத்தை தாங்கும் கம்பியை சுற்றி மண் மட்டும் கொட்டப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ரோட்டில் கம்பி ஊன்றப்பட்டு இருப்பது தெளிவாக தெரிவதில்லை. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நடுரோட்டில் உள்ள ஊன்று கம்பியை பிடுங்கி ரோட்டோரமாக நட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.