ADDED : டிச 06, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை சின்னவீரம்பட்டி சூர்யா மஹால் எதிரில், 'ராயல் கார்டன்', பிரம்மாண்ட விற்பனை திருவிழா மற்றும் திறப்பு விழா நாளை நடக்கிறது.
உடுமலை - திருப்பூர் மெயின் ரோட்டில், சின்னவீரம்பட்டி அருகே, 40 ஏக்கர் பரப்பளவில், 700க்கும் அதிகமான வீட்டு மனைகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வீடுகளை உள்ளடக்கிய 'ராயல்கார்டன்' அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, 500 முதல் 3,500 சதுர அடிகளில் வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ளது.'ராயல் கார்டன்' பிரம்மாண்ட விற்பனை திருவிழா மற்றும் திறப்பு விழா நாளை, (8ம் தேதி) மதியம் 3:00 மணிக்கு நடக்கிறது.
திறப்பு விழாவையொட்டி, விஜய் 'டிவி' நட்சத்திரங்கள் பங்கு பெறும் நட்சத்திர கொண்டாட்டம் நடக்கிறது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.