/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வெற்றி' அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி அகழ்வு இயந்திரம்
/
'வெற்றி' அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி அகழ்வு இயந்திரம்
'வெற்றி' அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி அகழ்வு இயந்திரம்
'வெற்றி' அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி அகழ்வு இயந்திரம்
ADDED : ஏப் 08, 2025 06:26 AM

திருப்பூர்; திருப்பூர் 'வெற்றி' அறக்கட்டளைக்கு ஜப்பான் நிறுவனம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அகழ்வு இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர்' என்ற மரம் வளர்ப்பு திட்டம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகப்பணிகளை 'வெற்றி' அறக்கட்டளை மேற்கொள்கிறது.
அறக்கட்டளைக்கு ஜப்பானை தலைமையிடமாக கொண்டு இயங்கும், 'கோமட்சு' நிறுவனம், சமூக பங்களிப்பு நிதியில் இருந்து, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள, அகழ்வு இயந்திரத்தை, வழங்கியுள்ளது.
கிராம அளவிலான தன்னார்வ அமைப்புகளுடன் கரம் கோர்த்து, இந்த இயந்திரத்தை கொண்டு, குளம், குட்டைகள் துார்வாரும் பணிகளை மேற்கொள்ள இயலும்.
'வெற்றி' அறக்கட்டளை இயக்குனர் குமார் துரைசாமி கூறுகையில், ''தமிழகத்தின் சூழலியல் ஆர்வலர் செந்துார் பாரியின், பரிந்துரைப்படி, ஜப்பானை சேர்ந்த நிறுவனம், 'வெற்றி' அமைப்புக்கு, இந்த அகழ்வு இயந்திரத்தை வழங்கியுள்ளது.
ஏரி, குளம், குட்டை துார்வாரும் பணிகளை சிறப்பாக மேற்கொண்டால், வரும் ஆண்டில் மற்றொரு இயந்திரத்தை வழங்கவும் வாய்ப்புள்ளது. முதல்கட்டமாக, மதுரை மாவட்டத்தில், நீர்நிலை பராமரிப்பு பணிகள் துவங்க இருக்கிறது; அடுத்த ஆண்டில், திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலை பராமரிப்பு பணிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

