/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.1 கோடி சீட்டு மோசடி மக்கள் தர்ணா
/
ரூ.1 கோடி சீட்டு மோசடி மக்கள் தர்ணா
ADDED : பிப் 16, 2024 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்,:திருப்பூர், மங்கலம் ரோடு, மாகாளியம்மன் கோவில் அருகே, 'ஈகிள் சக்தி சிட்ஸ்' என்ற பெயரில், கார்த்திக், 40, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர், ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தினர். அப்பகுதியை சேர்ந்த பலரும் சேர்ந்தனர்.
சீட்டு முதிர்வடைந்த நிலையில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த தொகையை வழங்காமல், சீட்டு நடத்தியோர் தலைமறைவாகி விட்டனர்.
பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். 'மோசடியில் ஈடுபட்டோர், திவால் நிலை என்று அறிவிக்க கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிய வருகிறது. இழந்த தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றனர்.