/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.10 கோடி பணம் மோசடி வழக்கு; மேலும் ஒரு பங்குதாரர் கைது
/
ரூ.10 கோடி பணம் மோசடி வழக்கு; மேலும் ஒரு பங்குதாரர் கைது
ரூ.10 கோடி பணம் மோசடி வழக்கு; மேலும் ஒரு பங்குதாரர் கைது
ரூ.10 கோடி பணம் மோசடி வழக்கு; மேலும் ஒரு பங்குதாரர் கைது
ADDED : செப் 27, 2024 12:31 AM

திருப்பூர் : முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாயை மோசடி செய்த வழக்கில், அவிநாசியை சேர்ந்த ஒரு பங்குதாரரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையை சேர்ந்தவர் முத்தையன், 48. திருப்பூர், குமார் நகரில் குடும்பத்துடன் தங்கி, பி.என்., ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். முதலீடு செய்தால், அதிக வட்டி கொடுப்பதாக கூறி விளம்பரம் செய்தார். இதை நம்பி, நிறுவனத்தில் கடந்த, 2018 ம் ஆண்டு முதல் பணத்தை பலரும் முதலீடு செய்தனர். அறிவித்தபடி வட்டியுடன், பணம் கொடுக்காமல், காலம் கடத்தினார். ஏமாற்றப்பட்டதை அறிந்த மக்கள் திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தனர். முதலீடு செய்யும் பணத்துக்கு, 12 சதவீதம் வட்டி தருவதாக கூறி, 211 பேரிடம், பத்து கோடி ரூபாய்க்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. மோசடி தொடர்பாக, முத்தையன், அவரது மனைவி மஞ்சு, 47, மகன் கிரண்குமார், 22 உட்பட, ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். கணவர் உட்பட, மூன்று பேரை கைது செய்து, கார், நகையை பறிமுதல் செய்து, மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இச்சூழலில், மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும், ஒரு பங்குதாரரான அவிநாசி, கருக்கன்காட்டுபுதுாரை சேர்ந்த உதயகுமார், 31 என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர், நான்கு நிறுவனங்களில் முத்தையாவுடன் பங்குதாரராக இருந்து, மக்களை நிறுவனத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்தார். இன்னும் சிலரை தேடும் போலீசார், மோசடி செய்யப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்கள் உள்ளிட்டவை கண்டறிந்து மீட்க விசாரித்து வருகின்றனர்.