ADDED : செப் 02, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருமாநல்லுார்; பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.
அறநிலையத்துறை துணை ஆணையர் ஹர்ஷினி, செயல் அலுவலர் சங்கரசுந்தரேசன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. இதில், 11 லட்சத்து, 21 ஆயிரத்து, 623 ரூபாய், 83 கிராம் தங்கம், 107.750 மில்லி கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் திருப்பூர் மகாவிஷ்ணு சேவா அமைப்பினர் மற்றும் பெருமாநல்லுார் கே.எம்.சி பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். இதில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் மனோகரன், அறங்காவலர்கள் சுந்தரமுத்து, திருமூர்த்தி, பானுமதி, ஜெகநாதன் மற்றும் கோவில் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.