/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்வோதய சங்கத்தில் ரூ.1.14 கோடி கையாடல்
/
சர்வோதய சங்கத்தில் ரூ.1.14 கோடி கையாடல்
ADDED : டிச 09, 2024 08:44 AM

திருப்பூர் : கொடுவாய் சர்வோதய சங்கத்தில், 1.14 கோடி ரூபாய் கையாடல் செய்த முன்னாள் செயலாளர் தலைமறைவானார்.
திருப்பூர் மாவட்டம், கொடுவாய் சர்வோதய சங்கத்தில் கடந்த 1992ம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர் குமாரசாமி, 54. உதவியாளராக பணியில் சேர்ந்த இவர் விற்பனை மேலாளராகவும் பணிபுரிந்தார். கடந்த 2023ல் சங்க செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.கடந்த அக்., மாதம் நடந்த சங்க செயற்குழு கூட்டத்தில் நடந்த ஆய்வின் போது, குமாரசாமி விற்பனை தொகை 1.14 கோடி ரூபாயை கையாடல் செய்தது தெரியவந்ததையடுத்து, செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். விற்பனை மேலாளராக அவர் நான்கு ஆண்டுகள் பணியில் இருந்த போது, இந்தக் கையாடல் நடந்துள்ளது.
கடந்த மாதம் 25ல், கையாடல் செய்த தொகையை திரும்ப செலுத்த அறிவுறுத்தப்பட்டது. அதை திரும்ப செலுத்த மறுத்ததோடு, அன்று முதல் அலுவலகத்துக்கும் வரவில்லை. கடந்த 27ம் தேதி முதல் அவர் தலைமறைவானார்.
சங்கச் செயலாளர் குமார், திருப்பூர் எஸ்.பி., மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.