/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்திமலை கோவிலுக்கு ரூ. 1.89 லட்சம் காணிக்கை
/
திருமூர்த்திமலை கோவிலுக்கு ரூ. 1.89 லட்சம் காணிக்கை
திருமூர்த்திமலை கோவிலுக்கு ரூ. 1.89 லட்சம் காணிக்கை
திருமூர்த்திமலை கோவிலுக்கு ரூ. 1.89 லட்சம் காணிக்கை
ADDED : அக் 23, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, தோணியாற்றில், கடந்த, 17 ம் தேதி இரவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அமணலிங்கேஸ்வரர் கோவில் வளாகம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், உண்டியல்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியது.
இதனையடுத்து, கடந்த மாதம், 18ம் தேதி உண்டியல்கள் திறந்து காணிக்கை எண் ணப்பட்ட நிலையில், ஒரு மாதத்தில் மீண்டும் கோவில் வளாகத்திலுள்ள, 12 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
மழை நீரில் நனைந்திருந்த ரூபாய் நோட்டுக்கள் இஸ்திரி செய்து, காய வைக்கப்பட்டது. இதில், ஒரு லட்சத்து, 89 ஆயிரத்து, 450 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.