ADDED : மார் 24, 2026 10:20 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:தாராபுரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல், நீர் வள ஆதாரத்துறை உதவி பொறியாளரிடம், 2 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தாராபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம் - அலங்கியம் ரோட்டில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் அப்துல் மஜீத் தலைமையில் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில், அவர் திருப்பூர், கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 52. திருப்பூர் மாவட்ட நீர் வள ஆதாரத்துறை உதவி பொறியாளராக பணியாற்றுகிறார்.
காரில், அவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட, 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம் கடன் செலுத்த கொண்டு சென்றதாக கூறினார். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு பணத்தை திரும்ப பெற்று கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
