தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வெ.கோவிலில் ரூ.2 லட்சம் பறிமுதல்

 வெ.கோவிலில் ரூ.2 லட்சம் பறிமுதல்

 வெ.கோவிலில் ரூ.2 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 17, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெள்ளகோவில்: காங்கயம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளக்கோவில் முத்துார் ரோட்டில் உள்ள வேலாயுதம்பாளையம் அருகே செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை செய்தனர். அதில்,ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சதீஷ், 40, என்பவரின் வேனை சோதனையிட்ட போது உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த, 2 லட்சத்து, 3 ஆயிரத்து, 500 ரூபாய் கைப்பற்றப்பட்டது. தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ரோடு பாரப்பாளையத்தில் தேர்தல் பறக்கும் படை மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலர் சுதந்திர தேவி தலைமையில் வாகன தணிக்கை செய்தனர்.

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட, ஒரு லட்சத்து, 24 ஆயிரம் ரூபாயை பாலசுப்ரமணியம் என்பவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us