/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தார் சாலை அமைக்க ரூ.44 கோடி ஒதுக்கீடு
/
தார் சாலை அமைக்க ரூ.44 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 23, 2025 11:26 PM

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 2வது இரண்டாவது மண்டல பகுதியிலுள்ள மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்ற மாநகராட்சி சார்பில், 44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 7வது வார்டுக்குபட்ட நஞ்சப்பா நகர் மற்றும் அவிநாசி நகருக்கு ஒரு கோடியே 24 லட்ச ரூபாய், குருவாயூரப்பன் நகருக்கு, 2.25 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தார் சாலை அமைப்பதற்கான, பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் கவிதா சாலை பணியை துவக்கி வைத்தார். உதவி பொறியாளர் வேல்முருகன், அ.தி.மு.க., வார்டு செயலாளர் விஜயகுமார், அண்ணா நெசவாளர் கூட்டுறவு சம்மேளன முன்னாள் தலைவர் ஜெகநாதன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றறனர்.