ADDED : மார் 21, 2024 06:50 AM
அ நிறம் | அளவு
திருப்பூர் : திருப்பூர், காங்கயம் ரோடு, பெம் ஸ்கூல் சோதனைச்சாவடி அருகே, திருப்பூர் தெற்கு, தேர்தல் பிரிவு அலுவலர் செல்வ சங்கர் மற்றும் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
எம்.ஜி., புதுார், இரண்டாவது வீதியை சேர்ந்த சந்திரகுமார் என்பவரது காரில் இருந்து, 70 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தல் கூடுதல் பறக்கும் படை குழுவினர் பறிமுதல் செய்த தொகையை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பவன்குமாரிடம் ஒப்படைத்து, கருவூலத்தில் சேர்த்தனர்.
