/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பறிமுதல் செய்தது ரூ.8 லட்சம்: திரும்ப வழங்கியது ரூ.4.75 லட்சம்
/
பறிமுதல் செய்தது ரூ.8 லட்சம்: திரும்ப வழங்கியது ரூ.4.75 லட்சம்
பறிமுதல் செய்தது ரூ.8 லட்சம்: திரும்ப வழங்கியது ரூ.4.75 லட்சம்
பறிமுதல் செய்தது ரூ.8 லட்சம்: திரும்ப வழங்கியது ரூ.4.75 லட்சம்
ADDED : மார் 23, 2026 03:53 PM
உடுமலை: உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், தேர்தல் அலுவலர்கள் சோதனையில், 8 லட்சத்து, 517 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், விதி மீறல்கள் மற்றும் பணம், பரிசு பொருட்கள் வினியோகத்தை தடுக்கும் வகையில், சட்டசபை தொகுதி வாரியாக, பறக்கும் நடை, நிலையான கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, வாகன சோதனைகள் நடந்து வருகிறது.
நேற்று வரை, உடுமலை தொகுதியில் கணக்கில் வராமல் கொண்டு வந்த, ரூ. 2 லட்சமும், மடத்துக்குளம் தொகுதியில், 6 லட்சத்து, 517 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குறை தீர்க்கும் குழுவில் உரிய ஆவணங்களை வழங்கியதன் அடிப்படையில், மடத்துக்குளம் தொகுதி கண்காணிப்பு அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்ட, 4 லட்சத்து, 75 ஆயிரத்து, 47 ரூபாய் திரும்ப வழங்கப்பட்டது.