ADDED : மார் 26, 2026 10:22 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்;காங்கயம் - ஈரோடு ரோடு நத்தக்காடையூரில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ஈஸ்வரமூர்த்தி என்பவரது காரில், உரிய ஆவணங்களின்றி இருந்த, 82 ஆயிரத்து, 900 ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம், பழநியில் பயிலும் மகனின் பள்ளி கட்டணத்துக்கு எடுத்து சென்றதாக தெரிவித்தார். இதற்கான ஆவணத்தை காண்பித்து, பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
