ADDED : ஏப் 01, 2026 09:04 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: தாராபுரத்தில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து சென்ற, 90 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தாராபுரம் (தனி) தொகுதிக்குள் சுழற்சி முறையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், தாராபுரத்தில், பூளவாடி - மடத்துப்பாளையம் ரோட்டில் பறக்கும் படை அதிகாரி சிவகுமார் தலைமையில் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்தவர், தாராபுரம், திம்மநாயக்கம்பாளையத்தை சேர்ந்த யுவராஜ், 37 என்பது தெரிந்தது. இவரது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த, 90 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
