/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொங்கலுக்கு ரூ.100 பரிசு; தி.மு.க., எம்.எல்.ஏ., தாராளம்
/
பொங்கலுக்கு ரூ.100 பரிசு; தி.மு.க., எம்.எல்.ஏ., தாராளம்
பொங்கலுக்கு ரூ.100 பரிசு; தி.மு.க., எம்.எல்.ஏ., தாராளம்
பொங்கலுக்கு ரூ.100 பரிசு; தி.மு.க., எம்.எல்.ஏ., தாராளம்
ADDED : ஜன 14, 2025 07:03 AM

திருப்பூர்; திருப்பூரில், தி.மு.க., அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் பெண்களுக்கு 100 ரூபாய், புத்தம் புதிய தாள் பரிசாக வழங்கப்பட்டது.திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகம், ராஜாராவ் வீதியில் உள்ளது. நேற்று இந்த அலுவலகத்தில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமையில், மாவட்ட அவைத் தலைவர் நடராஜன் முன்னிலையில் பொங்கல் விழா நடந்தது. நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ், மாணவர் அணி செயலாளர் திலகராஜ் மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்றனர்.
முன்னதாக அலுவலகம் முன் பகுதியில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு வழிபாடு நடந்தது. தொடர்ந்து அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வினியோகிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட மகளிர் அணியினருக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொங்கல் பரிசு பொருட்கள் அடங்கிய பையும், புத்தம் புது தாளாக தலா, 100 ரூபாய் நோட்டும் வழங்கி, பொங்கல் வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்.

