/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசியில் இன்று ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்
/
அவிநாசியில் இன்று ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்
ADDED : அக் 06, 2024 04:48 AM
அவிநாசி, : திருப்பூர் மாவட்ட ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.,) அணி வகுப்பு ஊர்வலம் அவிநாசியில் இன்று நடக்கிறது. மேற்கு ரத வீதி, குலாலர் திருமண மண்டபம் அருகே துவங்கும் அணி வகுப்பு ஊர்வலம், தாலுகா அலுவலகம், முத்துசெட்டிபாளையம், கால்நடை மருத்துவமனை, பைபாஸ் ரோடு, கிழக்கு ரத வீதி, வடக்கு ரத வீதியில் வழியாக சென்று நிறைவு பெறுகிறது.
பொதுக்கூட்டம் நடக்கிறது. வாகீசர் மடம் ஸ்ரீ காமாட்சிதாச சுவாமிகள் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். கணியாம்பூண்டி மாரிமுத்து, கொங்கு பண்பாட்டு மையம் ஸ்ரீ ஆதன் பொன் செந்தில்குமார், வக்கீல் இளங்குமார் சம்பத், கோட்ட தலைவர் பழனிசாமி, மாவட்ட தலைவர் கார்மேகம் உட்பட பலர் பேசுகின்றனர்.