/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னையை தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈ
/
தென்னையை தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈ
ADDED : மார் 15, 2026 05:17 AM
திருப்பூர்: கோடை வெயிலில் இருந்து தென்னையை காக்க, வேளாண் பல்கலை ஆலோசனை வழங்கியுள்ளது.வெயில் அதிகரித்துள்ள நிலையில் தென்னை உட்பட, அனைத்து மரப் பயிர்களுக்கும், வட்டப்பாத்தி அமைத்தும், மூடாக்கு அமைத்தும் நீர் ஆவியாதலை தடுக்க வேண்டும்.
அதிக வெயில் காரணமாக தென்னை மரங்களில், ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரிக்கிறது. இவற்றை கட்டுப்படுத்த, மஞ்சள் ஒட்டும் பொறி வைக்க வேண்டும். மேலும், 100 என்கார்சின் ஒட்டுண்ணி விட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மரத்துக்கு, உரங்களுடன், 50 கிலோ தொழு உரம் இட வேண்டும்.
ஒரு தென்னை மரத்திற்கு, அசோஸ்பைரில்லம் 200 கிராம், பாஸ்போ பாக்டீரியா, 200 கிராம், வேர் உட்பூசனம் 100 கிராம், பேசில்லஸ் சப்டில்லிஸ், 200 கிராம், டிரைக்கோடெர்மா 200 கிராம் என்ற அளவில் ஓராண்டிற்கு இட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

