/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வதந்தியால் தர்பூசணி விவசாயிகள் பாதிப்பு பறிக்காமல் வீணாகும் அவலம்
/
வதந்தியால் தர்பூசணி விவசாயிகள் பாதிப்பு பறிக்காமல் வீணாகும் அவலம்
வதந்தியால் தர்பூசணி விவசாயிகள் பாதிப்பு பறிக்காமல் வீணாகும் அவலம்
வதந்தியால் தர்பூசணி விவசாயிகள் பாதிப்பு பறிக்காமல் வீணாகும் அவலம்
ADDED : ஏப் 23, 2025 10:37 PM

உடுமலை; வீண் வதந்தி காரணமாக, தர்பூசணி விற்பனை சரிந்ததால், வயல்களில் பறிக்காமல் வீணாகி வருகிறது. ஏக்கருக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், பழநி, நெய்க்காரபட்டி உள்ளிட்ட திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தர்ப்பூசணி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, நோய்த்தாக்குதல், சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக, மகசூல் பாதித்த நிலையில், தர்பூசணியில் ஊசி கலப்படம் என வீண் வதந்தி பரவியதால், வியாபாரிகள் கொள்முதல் செய்யவில்லை.
இதனால், விலையின்றி, தர்பூசணி காய்களை பறிக்காமல், வயல்களிலேயே வீணாகி வருகிறது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு கூட்டுறவு சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் குப்புச்சாமி கூறியதாவது: தர்பூசணி சாகுபடிக்கு, விதை, உரம், களை எடுக்க என, ரூ.50 ஆயிரம் வரைசெலவாகிறது. மகசூல், 20 முதல், 25 டன் வரை கிடைக்கும் நிலையில், நடப்பாண்டு நோய்த்தாக்குதல், சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக, மகசூல் பெருமளவு குறைந்து, 15 டன் மட்டுமே கிடைக்கிறது.
அதே போல், கடந்தாண்டு இதே சீசனில், கிலோ, 25 ரூபாய் வரை விற்ற நிலையில், நடப்பாண்டு வீண் வதந்தி காரணமாக, கிலோ, 3க்கும் குறைவாக கேட்கின்றனர்.
பறிப்பு கூலி கூட கட்டுபடியாகாது என்பதால், வயல்களிலேயே பறிக்காமல் விட வேண்டிய அவலம் உள்ளது.
அரசுத்துறை அதிகாரிகள் பரப்பிய வதந்தி காரணமாக, விவசாயிகள் பாதித்துள்ள நிலையில், அரசு பொறுப்பேற்று, தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தார்.