/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுத்தை நடமாடுவதாக வதந்தி; வனத்துறையினர் எச்சரிக்கை
/
சிறுத்தை நடமாடுவதாக வதந்தி; வனத்துறையினர் எச்சரிக்கை
சிறுத்தை நடமாடுவதாக வதந்தி; வனத்துறையினர் எச்சரிக்கை
சிறுத்தை நடமாடுவதாக வதந்தி; வனத்துறையினர் எச்சரிக்கை
ADDED : டிச 24, 2025 06:14 AM
பல்லடம்: சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறை எச்சரித்துள்ளது.
சமீபத்தில், பல்லடத்தை அடுத்த, கரடிவாவி பகுதியில் சிறுத்தை உலா வந்ததாக கூறப்பட்ட நிலையில், வனத்துறையினர், அப்பகுதியில் இருந்த காலடித்தடங்களை ஆய்வு செய்ததில், நாய் மற்றும் மான் சென்றதற்கான தடயங்கள் தான் இருப்பதாகவும், சிறுத்தை குறித்து, எந்த தடயமும் இல்லை என்பதை உறுதி செய்தனர். தற்போது, சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, மீண்டும் தகவல் பரவி வருகிறது.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:
பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட, பள்ளபாளையம், பரமசிவம்பாளையம், வேலாயுதம்பாளையம், அக்ரஹாரப்புத்துார், வேட்டுவபாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, சமூக வலைதளங்களில் தகவல் மற்றும் படங்கள் பகிரப்படுகின்றன. அவை அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை என்பது கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், மேற்கூறிய பகுதிகளில், வனவிலங்கு நடமாட்டம் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
எனவே பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. இதுபோன்ற உண்மையற்ற பதிவுகளை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம். மக்களை அச்சுறுத்தும் வகையில், நம்பகத்தன்மையற்ற பதிவுகளை, சமூக வலைதளங்களில் பகிர்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பொய்யான தகவல்கள் பரப்புபவர்கள் மீது, வழக்கு பதியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து உறுதி செய்யப்படாத தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

