ADDED : பிப் 20, 2024 11:04 PM
அ நிறம் | அளவு
உடுமலை;உடுமலை பகுதி கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, வெளியூர் மற்றும் கிராமங்களுக்கு செல்வதற்காக தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். இதில், உடுமலை பகுதியிலுள்ள கிராமங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், அங்கு செல்லும் மக்கள், பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, கிராமங்களுக்க கூடுதல் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்துக்கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
