/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமப்புற பஸ் நிறுத்தம் மாணவர்கள் பாதிப்பு
/
கிராமப்புற பஸ் நிறுத்தம் மாணவர்கள் பாதிப்பு
ADDED : டிச 16, 2025 07:05 AM
அவிநாசி: திருப்பூரில் இருந்து அவிநாசி, சேவூர் வழியாக, முதலிபாளையம், கூட்டப்பள்ளி வரை இரண்டு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது.
இதனால், முதலிபாளையம், பஞ்சலிங்கம்பாளையம், காசிபாளையம் சுற்றுவட்டாரங்களில் உள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு பெரும் உதவியாக இருந்தது.
'நாளடைவில் ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது; தற்போது, அதுவும் நிறுத்தப்பட்டு, வாரம் ஒரு நாள் மட்டும், பெயரளவுக்கு பஸ் இயக்கப்படுகிறது' என, முதலிபாளையம் மக்கள் கூறுகின்றனர். 'கிராமப்புறமான முதலிபாளையத்துக்கு அரசு பஸ் போக்குவரத்து மட்டுமே, பிரதானம்.
இதனை நம்பித்தான் இங்குள்ள மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் உள்ளனர். ஆனால், பஸ் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், அவர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.
சரியான நேரத்துக்கு தங்கள் அலுவல் களுக்கு செல்ல முடியாத நிலையுள்ளது; உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

