/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளி ஆண்டு விழா
/
எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளி ஆண்டு விழா
ADDED : ஜன 09, 2024 12:41 AM

திருப்பூர்;அவிநாசி, பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையம் எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 11வது ஆண்டு விழா பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளி தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ராதாமணி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மீனாட்சி வரவேற்றார். ஈரோடு மகேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ''மாணவர்கள் அபாரமான தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே, எந்த பிரச்னையாக இருந்தாலும் துாக்கி எறிய முடியும்,'' என்றார்.
விழாவில், பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்வி, விளையாட்டு உட்பட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.