/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சபரி யாத்திரை குழு அன்னதான விழா
/
சபரி யாத்திரை குழு அன்னதான விழா
ADDED : டிச 21, 2024 11:35 PM
திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, ஸ்ரீசபரிசாஸ்தா சபரி யாத்திரை குழுவினரின், 18ம் ஆண்டு அன்னதான விழாவில் நேற்று, திருவிளக்கு பூஜை நடந்தது.
இந்த அமைப்பின் சார்பில், கடந்த, 16ம் தேதி கொடிமுடியில் ஸ்ரீவேத சாஸ்தாவுக்கு ஆராட்டு விழா நடந்தது. நேற்று, செல்வ விநாயகர் கோவிலில் மகா கணபதி ேஹாமம், திருவிளக்கு வழிபாடு நடந்தது.
அணைக்காடு மகா மாரியம்மன் கோவிலில் இருந்து, குருமார்கள் முன்னிலையில் அய்யப்ப பக்தர்கள் புடைசூழ திருபாவரண பெட்டி எடுத்துவரப்பட்டது.
மாலையில், சிறப்பு அபிேஷகம், இரவு, 7:00 மணிக்கு கூட்டு பஜனையும், மகாதீபாராதனையும் நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு மகேஸ்வர பூஜையும், 10:30 மணி முதல் அன்னதானமும், மாலையில் மேள, தாளத்துடன் சுவாமி திருவீதியுலாவும் நடைபெறும். அணைக்காடு மகாமாரியம்மன் கோவில் திருநாமலிங்கேஸ்வரர் சிவாச்சார்யார் தலைமையிலான குழுவினர் பூஜைகளை நடத்தி வருகின்றனர்.