/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேகத்தடை அகற்றுவதில் படுவேகம் மீண்டும் அமைக்காமல் சோகம்
/
வேகத்தடை அகற்றுவதில் படுவேகம் மீண்டும் அமைக்காமல் சோகம்
வேகத்தடை அகற்றுவதில் படுவேகம் மீண்டும் அமைக்காமல் சோகம்
வேகத்தடை அகற்றுவதில் படுவேகம் மீண்டும் அமைக்காமல் சோகம்
ADDED : ஆக 22, 2025 11:45 PM

உடுமலை: முதல்வர் நிகழ்ச்சிக்காக, உடுமலை நகரம் மற்றும் புறநகர் பகுதியில் அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படாததால், போக்குவரத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
உடுமலை நகரிலுள்ள தளி ரோடு போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோடாகும். இந்த ரோட்டில், நகராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ள, மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து அதிகமுள்ளது.
மேம்பாலம் துவங்கும் இடத்தில், ரோடு சந்திப்பு பகுதி உள்ளது. அவ்விடத்தில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, நீண்ட இழுபறிக்குப்பிறகு, அங்கு வேகத்தடை அமைத்தனர்; அதே ரோட்டில், அரசுப்பள்ளி உள்ளிட்ட இடங்களிலும் வேகத்தடை இருந்தது.
இம்மாத துவக்கத்தில், முதல்வர் நிகழ்ச்சிக்காக தளி ரோட்டில் இருந்த அனைத்து வேகத்தடைகளும் அகற்றப்பட்டன. இதே போல், உடுமலை - பல்லடம், தாராபுரம் மாநில நெடுஞ்சாலை இதர ரோடுகளிலும் வேகத்தடைகள் அகற்றப்பட்டது.
முதல்வர் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பிறகு, அகற்றப்பட்ட வேகத்தடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை.இதனால், மேம்பாலம் பகுதியிலும், இதர ரோடுகளிலும் வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர். சந்திப்பு பகுதிகளில் நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
முதல்வர் வருகைக்காக சுறுசுறுப்பாக பணியாற்றிய நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அதிகாரிகள், விபத்துகளை தவிர்க்க, இனியாவது வேகத்தடையை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.