/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கடன் உத்தரவாத திட்டத்தால் பாதுகாப்பான வர்த்தகம்'
/
'கடன் உத்தரவாத திட்டத்தால் பாதுகாப்பான வர்த்தகம்'
ADDED : ஜன 09, 2025 12:06 AM
திருப்பூர் ; ஏற்றுமதி கடன் காப்பீடு திட்டங்கள் வாயிலாக, பாதுகாப்பாக ஏற்றுமதி வர்த்தகம் செய்ய முடிவதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (பியோ) சார்பில், ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு கூட்டம், திருப்பூர் பார்ச்சூன் பார்க் ஓட்டலில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு தென்பிராந்திய உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இ.சி.ஜி.சி., மற்றும் வெளிநாட்டு வர்த்தக பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஏற்றுமதி கடன் மேலாண் மை மற்றும் சர்வதேச வர்த்தகத்தில், இ.சி.ஜி.சி.,யின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடினர். ஏற்றுமதி கடன் காப்பீடு திட்டங்கள் வாயிலாக, இந்திய ஏற்றுமதியாளர்களை பாதுகாப்பாக வர்த்தகம் செய்வது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடன் உத்தரவாத கழகம் (இ.சி.ஜி.சி.,), ஏற்றுமதி நிறுவனங்களின் நிதி அபாயங்களை குறைப்பதுடன், ஏற்றுமதிக்கு பெரும் கடன் வசதியை எளிதாக வழங்குகிறது. ஏற்றுமதியாளர் இடையே சீரான பணப்புழக்கத்தை பராமரிக்கவும், புதிய சந்தை வாய்ப்புகளை விரிவாக்கவும் உதவியாக இருப்பதாக, தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே, ஏற்றுமதியாளர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து, இ.சி.ஜி.சி., சார்பில், காசோலை வழங்கப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது.மத்திய வர்த்தகத்துறையின் கீழ் இயங்கும், வெளிநாட்டு பொது இயக்குனரகத்தை சேர்ந்த அதிகாரிகள், ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பாகவும், பொது இயக்குனரக உதவிகள் குறித்தும் விளக்கினர். ஏற்றுமதியாளர்கள் திரளாக பங்கேற்றனர்.