/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சகோதயா' கூடைப்பந்து; பெம் பள்ளி அபாரம்
/
'சகோதயா' கூடைப்பந்து; பெம் பள்ளி அபாரம்
ADDED : டிச 03, 2024 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் பகுதிகளுக்குட்பட்ட 'சகோதயா' சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் பூமலுார் சிவா நிகேதன் பப்ளிக் பள்ளியில் நடந்தது.
இதில், 23 பள்ளிகள் பங்கேற்றன. சூப்பர் சீனியர் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவு, சீனியர் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவு இறுதிப்போட்டிகளில் பெம் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி வென்று, கோப்பைகளைக் கைப்பற்றியது.
ஜூனியர் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவு இறுதிப்போட்டியில் சிவா நிகேதன் பள்ளி வென்றது.
வெற்றி பெற்ற மாணவியரை பள்ளி தாளாளர் விஷ்ணு பழனிசாமி, செயலாளர் சரண்யா, மூத்த முதல்வர் கவுசல்யா ராஜன், முதல்வர் விஜய் கார்த்திக் ஆகியோர் பாராட்டினர்.