/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடை ஆர்டர் வேகம் பெற 'சைமா' புதிய முயற்சி
/
ஆடை ஆர்டர் வேகம் பெற 'சைமா' புதிய முயற்சி
ADDED : அக் 03, 2024 04:47 AM
திருப்பூர் : திருப்பூரில் உற்பத்தியாகும், பின்னல் ஆடைகள் மற்றும் உள்ளாடைகள், நாடு முழுவதும் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு செல்கிறது.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) உறுப்பினர்களுக்காக, உள்ளாடைகள் மற்றும் பனியன் ஆடைகள் உற்பத்தி செய்து கொடுக்க, 'பவர் டேபிள்' நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
கட்டண அடிப்படையில், 2000க்கும் அதிகமான ஜாப் ஒர்க் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள், சைமா உறுப்பினர் நிறுவனங்களுக்காக, 'ஜாப் ஒர்க்' முறையில் உற்பத்தி செய்து கொடுக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, 'சைமா'உறுப்பினர் நிறுவனங்களுக்கு, பனியன் ஆடை மற்றும் உள்ளாடைகளை, நேர்த்தியாக வடிவமைத்து கொடுக்க கூடுதல் 'பவர் டேபிள்' நிறுவனங்கள் தேவைப்படுகின்றன.
அதேபோல், பல பவர்டேபிள் செக் ஷன்களுக்கு, சீரான முறையில் ஆர்டர் கிடைப்பதில்லை; தொழிலாளர்களுக்கு சரியாக வேலை கொடுக்க முடிவதில்லை என்ற கவலையும் இருக்கிறது. இத்தகைய இடைவெளியை போக்க, 'சைமா' சங்கமும், 'பவர்டேபிள்' சங்கமும், ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொண்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, புதிய 'வாட்ஸ் ஆப்' குழு துவங்கி, பரஸ்பரம் ஆர்டர் குறித்து தகவல்களை பரிவர்த்தனை செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.