/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைகளை அழகுபடுத்தும் ஆபரணங்கள் விற்பனை: ஆர்வத்துடன் வாங்கிய விவசாயிகள்
/
கால்நடைகளை அழகுபடுத்தும் ஆபரணங்கள் விற்பனை: ஆர்வத்துடன் வாங்கிய விவசாயிகள்
கால்நடைகளை அழகுபடுத்தும் ஆபரணங்கள் விற்பனை: ஆர்வத்துடன் வாங்கிய விவசாயிகள்
கால்நடைகளை அழகுபடுத்தும் ஆபரணங்கள் விற்பனை: ஆர்வத்துடன் வாங்கிய விவசாயிகள்
ADDED : ஜன 15, 2024 10:20 PM
உடுமலை;உடுமலை பகுதிகளில், பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப்பொங்கலுக்கு, கால்நடைகளை அழங்கரிக்க விவசாயிகள் ஆபரணங்களை வாங்கினர்.
உடுமலை பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளதால், உழவர் திருவிழாவான, பொங்கல் திருநாள், கிராமங்களில் மட்டுமின்றி, நகரங்களிலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
தை முதல் நாளான நேற்று, உலகிலுள்ள உயிரினங்களில் வாழ்விற்கு ஆதாரமாக உள்ள இயற்கைக்கும், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாக்கோலமிட்டு, வாசல்களில் புத்தரிசி, வெல்லம் கொண்டு, புதுப்பானைகளில் 'பொங்கலோ பொங்கல்' என்ற முழக்கத்துடன் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.
வீடுகளில் மாவிலை தோரணம் கட்டியும், கரும்புகள் வைத்து, பொங்கலை சூரியனுக்கு படைத்தும், புத்தாடைகள் அணிந்தும் உற்சாகமாக கொண்டாடினர். கிராமங்கள், நகர பகுதிகளில், பாரம்பரிய விளையாட்டுக்கள், கலை நிகழ்ச்சிகள் என களை கட்டியது. இன்று, விவசாயத்துக்கு உறுதுணையாக உள்ள கால்நடைகளை சிறப்பிக்கும் வகையில், உழவு கருவிகளை வணங்கும் வகையில், விவசாய நிலங்களில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதற்காக, நேற்று மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணங்கள் அடித்து அழகு படுத்தும் பணியும் நடந்தது.
நேற்றும், உடுமலை சந்தையில், கரும்பு, மஞ்சத்கொத்து, காய்கறிகள் விற்பனை களை கட்டியது. மாடுகளுக்கு புதிதாக அணிவிக்க, கழுத்து கயிறு, மூக்கணாங்கயிறு, பிடி கயிறு என கால்நடைகளுக்கு தேவையான பொருட்கள், அழகுபடுத்தும் ஆபரணங்கள் விற்பனையும் அதிகளவு காணப்பட்டது. நாளை, உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடும் விழாவாகவும், நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பூப்பறிக்கும் விழா, காணும் பொங்கல் விழா கிராமங்களில் நடக்கிறது.