
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், காட்டன் மார்க்கெட், தொழில் பாதுகாப்பு மையத்தில், திருப்பூர், சுதேசி விழிப்புணர்வு இயக்கம், தாராபுரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் நேரடி விற்பனை துவக்க விழா நடந்தது.
ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ஆடிட்டர் தனஞ்ஜெயன் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார். சுதேசி விழிப்புணர்வு இயக்க மாநில அமைப்பாளர் சத்யநாராயணன், உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுதேசி விழிப்புணர்வு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசந்தர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

