/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் பலி பீடத்தில் உப்பிடுதல் வழிபாடு
/
கோவில் பலி பீடத்தில் உப்பிடுதல் வழிபாடு
ADDED : ஏப் 16, 2025 11:47 PM

உடுமலை; மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது, பக்தர்கள் உப்பு கொண்டு வந்து, பலி பீடத்தில் வைத்து வணங்கி வருகின்றனர்.
எதிலிருந்து தோன்றியதோ, அதிலேயே கரைவது என்பதை வலியுறுத்தும் தத்துவமே, இந்த வழிபாடு ஆகும். நீரிலிருந்து தோன்றுவது; சுவைக்காக சேர்த்தாலும், அளவு அதிகரித்தாலும், குறைந்தாலும் சுவை கெடும்.
அது போல், வாழ்க்கையும் முறையாக வாழ வேண்டும். உடல் நோய்கள், வாழ்வியல் சிக்கல்கள் உப்பு போல் கரைய, அம்மனை வேண்டி பக்தர்கள் வழிபடுகின்றனர்.
அதே போல், உடலில் எந்த பகுதியில் நோய் தாக்கி, அம்மனை வேண்டி குணமடைந்ததும், அந்த பகுதியை மண்ணால் செய்த உருவமாக அம்மனுக்கு வைத்து வழிபடும் பாரம்பரியம் உள்ளது.
உடல் பாகங்களின் உருவாரங்கள் மட்டுமின்றி, கால்நடைகளின் வளம் பெருகவும், அம்மனை வேண்டி, குதிரை, மாடு போன்ற உருவங்களையும் காணிக்கையாக செலுத்தி வழிபடுகின்றனர்.