/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலை கோவிலில் சமபந்தி விருந்து
/
சிவன்மலை கோவிலில் சமபந்தி விருந்து
ADDED : ஆக 15, 2025 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; சுதந்திர தினத்தை முன்னிட்டு சிவன்மலை ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று சமபந்தி விருந்து நடந்தது.
அதிகாலை முதல் சிவன்மலை கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பிற்பகல் உச்சிக்கால பூஜைக்குப் பின்னர் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் வகையில் சமபந்தி விருந்து நடந்தது.
மாவட்ட கல்வி அலுவலர் காளிமுத்து, கோவில் உதவி கமிஷனர் நந்தகுமார், தி.மு.க., நிர்வாகிகள் சிவானந்தன், சேமலையப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.