ADDED : அக் 25, 2024 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்: பல்லடத்தை அடுத்த மாதப்பூரைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி 52; விவசாயி. இவரது தோட்டத்தில் தானாக வளர்ந்திருந்த இரண்டு சந்தன மரங்களை, மர்ம நபர்கள் யாரோ சிலர் நேற்று முன் தினம் வெட்டி கடத்திச் சென்றனர்.
மறுநாள் (நேற்று) தெய்வசிகாமணி வந்து பார்த்தபோது, இரண்டு சந்தன மரங்களின் கிளைகள் வெட்டி வீசப்பட்ட நிலையில், அதன் அடிப்பகுதியை வேருடன் வெட்டிக் கடத்தி சென்றது தெரிந்தது.
இது தொடர்பாக தெய்வசிகாமணி அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். வனத்துறை அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார்விசாரிக்கின்றனர்.