ADDED : நவ 01, 2025 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: 'வெற்றி' அறக்கட்ட ளையின், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், பல்வேறு பசுமை அமைப்புகளும் கரம்கோர்த்து, மரக்கன்று நட்டு வளர்க்கும் இயக்கத்தை நடத்தி வருகின்றன.
பசுமை இயக்கமாக மாறியுள்ள இத்திட்டத்தில் இதுவரை, 24 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன; வடகிழக்கு பருவம் முடி வதற்குள், 25 லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், மூலனுார் காட்டுசாமிபாளையத்தில், கோகுல், புகழ்வடிவு ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் சந்தனம் -1300, வேங்கை -40, நாவல் - 40, புளி -10, கொடுக்காப்புளி -10, தேக்கு -100 என, 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், மரக்கன்று நட்டு வளர்க்க ஆர்வமுள்ளவர்கள், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, தெரிவித்துள்ளனர்.

