/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காசிவிஸ்வநாதருக்கு சங்காபிேஷக விழா
/
காசிவிஸ்வநாதருக்கு சங்காபிேஷக விழா
ADDED : நவ 25, 2025 05:47 AM

- நிருபர் குழு -: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சோமவார சங்காபிேஷக பூஜை நடைபெற்றது.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், காசி விஸ்வநாதர் சன்னதியில், விசேஷ நாட்களில், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நேற்று சோமவார 108 சங்காபிேஷக பூஜைகள் நடைபெற்றது. 108 வலம்புரி சங்கு மற்றும் மலர்களால், 'ஓம்' என அலங்கரித்து, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, கார்த்திகை மாதம் இரண்டாவது வாரமாக சோமவார சங்காபிேஷகம் நேற்று மாலை நடந்தது.
பூஜையில், மாலை, 4:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது.மாலை, 5:00 மணிக்கு கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவலிங்க வடிவில், 308 சங்குகளால் அலங்கரிக்கப்பட்டு காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு யாகபூஜை நடந்தது.
பூஜைக்கு பின், பக்தர்கள் புனித நீரை கையில் ஏந்தி கோவிலை மூன்று முறை வலம் வந்தனர். அத-ன் பின் சங்காபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் நுற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

