தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு நிர்ணய ஊதியம் வேண்டும் :துாய்மை பணியாளர் வலியுறுத்தல் 

அரசு நிர்ணய ஊதியம் வேண்டும் :துாய்மை பணியாளர் வலியுறுத்தல் 

அரசு நிர்ணய ஊதியம் வேண்டும் :துாய்மை பணியாளர் வலியுறுத்தல் 


UPDATED : மே 18, 2026 07:45 PM

ADDED : மே 18, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2026 07:45 PM ADDED : மே 18, 2026 07:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர் உள்ளிட்ட ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.) தலைவர் பழனிசாமி, செயலாளர் ரங்கராஜ், திருப்பூர் மாநகராட்சி கமிஷனரிடம் அளித்த மனு:

திருப்பூர் மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், ஓட்டுநர், குடிநீர் மற்றும் டி.பி.சி. ஊழியர்கள் ஊதியம் குறைவாகவும், குறித்த தேதிகளில் ஊதியம் வழங்கப்படாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். துாய்மைப் பணியாளர் வேலை நிறுத்தம் செய்து, பேச்சு வார்த்தை நடத்திய ஏற்படுத்திய முடிவுப்படி, சம்பள ரசீது வழங்கப்படுவதில்லை.

ஊதியமும் குறைத்து வழங்கப்படுகிறது. போக்குவரத்து கட்டணம், குடியிருப்பு வாடகை கூடுதலாக பிடிக்கப்படுகிறது. துாய்மைப் பணியாளர் குடியிருப்பு மிகவும் மோசமாக உள்ளது. குடிநீர் பணியாளர்கள், டிபி.சி. ஊழியர்களுக்கும் சி.ஐ.டி.யூ. தொடுத்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவுப்படி, கலெக்டர் அறிவித்த ஊதியம்வழங்குவதில்லை. குடிநீர் பணியாளருக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய். டிபி.சி. ஊழியருக்கு தினசரி ஊதியம் 355 ரூபாய் வழங்குகின்றனர். அவர்களுக்கு 838 ரூபாய் தின ஊதியம்; துாய்மைப் பணியாளருக்கு 761 ரூபாய்; குடிநீர் பணியாளர், ஓட்டுநர்களுக்கு 799 ரூபாய் வழங்க வேண்டும். 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். அவுட் சோர்சிங் முறையை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us