/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களில்லை; உடுமலை நகராட்சியில் அவலம்
/
துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களில்லை; உடுமலை நகராட்சியில் அவலம்
துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களில்லை; உடுமலை நகராட்சியில் அவலம்
துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களில்லை; உடுமலை நகராட்சியில் அவலம்
ADDED : மார் 17, 2025 09:30 PM
உடுமலை : உடுமலை நகராட்சி பகுதியில், வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் துாய்மை பணியாளர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள், தள்ளுவண்டிகள் வழங்க வேண்டும்.
உடுமலை நகராட்சியில், 17,526 வீடுகள், 1,038 வணிக நிறுவனங்கள் உள்ளன. நகராட்சியில், நாள் ஒன்றுக்கு, 28 டன் குப்பைகள் சேகரமாகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், உபயோகிப்பாளர்களுக்கு குப்பை வரி நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
நகராட்சியிலுள்ள, 230க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் வாயிலாக, வீடுகள், வணிக நிறுவனங்களில் நேரடியாக குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில், மக்கும், மக்காத குப்பைகள் பிரித்து வாங்கப்படுகிறது.
இப்பணியில் ஈடுபட்டுள்ள துாய்மை பணியாளர்களுக்கு, கையுறை, காலுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், பாதுகாப்பற்ற நிலையில், கழிவுகள் சேகரித்து வருகின்றனர்.
மேலும், துாய்மை பணியாளர்களுக்கு, சிவப்பு, பச்சை வண்ணங்களில், பிளாஸ்டிக் பக்கெட்கள் வழங்கப்பட்டன. பல ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட பக்கெட்கள் உடைந்தும், பயனில்லாமலும் உள்ளது.
இதனால், சேகரிக்கும் கழிவுகளை பாதுகாப்பாக நுண் உரக்குடிலுக்கு கொண்டு வர முடியாமல், திணறுகின்றனர். மேலும், தள்ளுவண்டிகளும் பராமரிப்பின்றி, உடைந்தும், தள்ள முடியாமல், கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, துாய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், புதிய பிளாஸ்டிக் பக்கெட்கள் மற்றும் தள்ளுவண்டிகள் வழங்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.