தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/துாய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

துாய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்

துாய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 08:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: துாய்மைப் பணியை தனியார் மயமாக்குவதைக் கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் துாய்மைப் பணியை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்; அடிப்படை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்; அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும்; துாய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுக்கு பதிலாக ரூ.100 உணவுப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.

இதுதொடர்பாக கடந்த 1-ம் தேதி உள்ளாட்சி அமைப்புகளிடம் கோரிக்கை கடிதம் வழங்கிய சி.ஐ.டி.யு., அக். 5 முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவித்திருந்தது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலும் நேற்று வேலைநிறுத்தம் தொடங்கியது. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இன்று முதல் அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்கள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் – சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us