தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சம வேலைக்கு சம ஊதியம் கோரி துாய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம்

 சம வேலைக்கு சம ஊதியம் கோரி துாய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம்

 சம வேலைக்கு சம ஊதியம் கோரி துாய்மை பணியாளர் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 01, 2026 07:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 07:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி.) சார்பில், திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சேகர், மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஊராட்சிகளில் பணிபுரியும் சுகாதார ஊக்குனர்களுக்கு மாதம் ரூ.15,593, குடிநீர் மற்றும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்களுக்கு ரூ.14,593, துாய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி துாய்மை பணியாளர்களுக்கு ரூ.12,593 குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

துாய்மை பணியாளர்களுக்கு அகவிலைப்படி, ஆண்டுதோறும் ஊதிய உயர்வு, மருத்துவப்படி, வீட்டுவாடகைப்படி உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். துாய்மை பாரத இயக்கம், சமூக தணிக்கை, ஊரக வாழ்வாதாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவோருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

மேலும், அனைத்து திட்ட கம்ப்யூட்டர் இயக்குபவர்கள் உள்ளிட்டோருக்கு இ.எஸ்.ஐ., பி.எப்., குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும். மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு வருவாய் கிராம ஊழியர்களுக்கு இணையான சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us