ADDED : டிச 19, 2024 11:36 PM

உடுமலை; உடுமலை அரசு மருத்துவமனையில், துாய்மைப்பணியில், 45 பேர் பணியாற்றி வருகின்றனர். தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்களாக, பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் அவர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்காமல், அரசு நிர்ணயித்த ஊதியத்தை விட குறைவான ஊதியம் வழங்கப்பட்டு, மோசடி செய்யப்படுகிறது.
தொழிலாளர்களுக்கு சம்பள பில், வார விடுப்பு மற்றும் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல், துாய்மைப்பணி மேற்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். எனவே, அரசு நிர்ணயித்துள்ள, ரூ.648 ஊதியம் வழங்கவும், சம்பள பட்டியல் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரு நாட்களாக, அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், விரைவில் தீர்வு காண வேண்டும்.