ADDED : ஜூன் 25, 2026 04:30 AM
காங்கேயம்,:காங்கேயம்
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மும்பையை தலைமை இடமாக கொண்டு
செயல்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து துாய்மை பணியாளர்கள், ஒப்பந்த
அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.
70 ஊழியர்கள் மூன்று மாதங்களாக வேலை
செய்து வரும் நிலையில், ஒரு மாதம் சம்பளம் மட்டுமே கொடுத்துள்ளனர். மாத
சம்பளம் ரூ.14 ஆயிரம் என கூறி ரூ.11 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாக
கூறப்படுகிறது. எனவே ஒப்பந்த பணியாளர்கள், 40 பேர் நேற்று காலை வழக்கம்
போல் வேலைக்கு வந்துவிட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனை முன் காத்திருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களுடன் தனியார் நிறுவன மேலாளர் பிரபு,
தலைமை மருத்துவர் தியாகராஜன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விரைவில் தீர்வு காணப்படும் என கூறியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து
சென்று வழக்கமான பணிக்கு சென்றனர்.
