ADDED : ஜன 26, 2026 04:59 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்: சமஸ்கிருத பாரதி சார்பில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக, மாநிலம் முழுவதும் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
அதன்படி, அனைத்து வயதினரும், சமஸ்கிருதம் கற்று வருகின்றனர். திருப்பூரில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், இரண்டு மணி நேரம் இலவச சமஸ்கிருத பயிற்சி வழங்கப்படுகிறது.
திருப்பூரில் நடக்கும் வகுப்புகளில், 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், பயிற்சி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் தேர்வு நேற்று நடந்தது.
பயிற்சி பெற்ற, 25 பேர், தேர்வில் பங்கேற்றனர். அடுத்த கட்ட சமஸ்கிருத பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, 94438 26523 என்ற எண்களில் அணுகலாம் என, சமஸ்கிருத பாரதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
