/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மயான வளாகத்தில் மரக்கன்று; மாநகராட்சியில் திட்டம் துவக்கம்
/
மயான வளாகத்தில் மரக்கன்று; மாநகராட்சியில் திட்டம் துவக்கம்
மயான வளாகத்தில் மரக்கன்று; மாநகராட்சியில் திட்டம் துவக்கம்
மயான வளாகத்தில் மரக்கன்று; மாநகராட்சியில் திட்டம் துவக்கம்
ADDED : செப் 20, 2024 05:41 AM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி மயானம் புனரமைப்பு செய்து, மரக்கன்று நடும் திட்டம் நேற்று துவங்கியது.
திருப்பூர் ஸ்ரீ ஜீவாதாரம் சேவா டிரஸ்ட் சார்பில்,' காண்டவ வனம்' என்னும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநகராட்சிக்குச் சொந்தமான, பி.என்., ரோடு பகுதியில் உள்ள மாநகராட்சி மயானம் புனரமைப்பு செய்து, மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டம் துவங்கப்பட்டது.
மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர். டிரஸ்ட் தலைவர் ஆனந்த் சுப்ரமணியம், துணை தலைவர் மதனகோபால், துணை செயலாளர் சரவண குமார் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். உதவி கமிஷனர் கனகராஜ், கவுன்சிலர்கள் பத்மாவதி, ராதாகிருஷ்ணன், வனச் சரகர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வரும், 30 நாட்களில், 300 மரக்கன்றுகள் நட்டு, சொட்டு நீர்ப் பாசனம் ஏற்படுத்தி, மரங்கள் பராமரித்து வளர்க்கப்படவுள்ளது. அருகேயுள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி வளாகத்திலும் மரக்கன்றுகள் இத்திட்டத்தில் நடப்படவுள்ளது.