
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் இனி ஒரு விதி செய்வோம் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில், நேற்று பெண்கள் பங்கேற்ற சேலை வாக்கத்தான் நிகழ்வு நடைபெற்றது. அம்மாபாளையம் கருணையம்மாள் திருமண மண்டபத்தில் துவங்கி ஒரு கி.மீ., துாரம் நடைபெற்ற இந்த நிகழ்வில் நுாற்றுக்கணக்கான பெண்கள் சேலை அணிந்து வந்து பங்கேற்றனர்.
இதன் ஏற்பாட்டாளர் கவிதா கூறுகையில், ''மகளிர், திருநங்கையர் நலனுக்காகவும், விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் நிதி திரட்டும் விதமாக இந்த சேலை வாக்கத்தான் நிகழ்வு நடைபெற்றது. முதன் முறையாக இது போன்ற ஒரு நிகழ்வு இங்கு நடந்துள்ளது. பல்வேறு தரப்பைச் சேர்ந்த பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்'' என்றார்.