/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில்களில் சஷ்டி பூஜை; பக்தர்கள் திரளாக பங்கேற்பு
/
கோவில்களில் சஷ்டி பூஜை; பக்தர்கள் திரளாக பங்கேற்பு
கோவில்களில் சஷ்டி பூஜை; பக்தர்கள் திரளாக பங்கேற்பு
கோவில்களில் சஷ்டி பூஜை; பக்தர்கள் திரளாக பங்கேற்பு
ADDED : ஜூலை 30, 2025 08:20 PM

உடுமலை; ஆடிமாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு, உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு பால், பன்னீர் உட்பட பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், சஷ்டி நாளான நேற்று காலை, 6:30 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு பால், சந்தனம், திருநீறு, இளநீர், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிேஷக பூஜையும், தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், பக்தி பாடல்களை பாடி முருகனை வழிபட்டனர். பூஜையில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதே போல், முடீஸ் சுப்ரமணிய சுவாமி கோவில், வாட்டர்பால்ஸ் பாலமுருகன் கோவில்களில் ஆடிமாத சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.