sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சேமிப்பே முதல் செலவு; அதுவே நல்வரவு

/

சேமிப்பே முதல் செலவு; அதுவே நல்வரவு

சேமிப்பே முதல் செலவு; அதுவே நல்வரவு

சேமிப்பே முதல் செலவு; அதுவே நல்வரவு


ADDED : அக் 11, 2025 11:13 PM

Google News

ADDED : அக் 11, 2025 11:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுதுளி பெருவெள்ளம்; இன்றைய சேமிப்பு - நாளைய வாழ்வின் பாதுகாப்பு; ஓரறிவு எறும்புக்குச் சேமிப்புத்தான் வாழ்க்கை - ஆறறிவு மனிதனுக்கோ சேமித்தால்தான் வாழ்க்கை. ஆம்; சேமிப்பே ஒருவரது எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக்குகிறது; சேமிப்பைச் சரியான விதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம். நாம் சம்பாதிக்கும் பணத்தைச் செலவிடுவதற்கு முன், ஒரு கணிசமான பங்களிப்பை நம் முதல் செலவாக சேமிப்புக்கு ஒதுக்க வேண்டும். சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும், அக்., 12ம் தேதி தேசிய சேமிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்த அதிகாரிகள் கருத்துகள்:

'செல்வமகள்' திட்டம்

திருப்பூர் முன்னிலை

பட்டாபிராமன், தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர்:

'செல்வமகள்' சேமிப்பு திட்ட கணக்கில், மாநிலத்தில் இரண்டாமிடத்தில் திருப்பூர் உள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும், 6,502 கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. திட்டம் துவங்கியதால் இருந்து இதுவரை, 48, 900 செல்வமகள் சேமிப்பு கணக்குகள் துவங்கப்பட்டு, சேமிப்பு பழக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் தபால் அலுவலகம் துவங்கப்பட்டது முதல், இதுவரை, 10.80 லட்சம் சேமிப்பு கணக்குகள் உள்ளன. வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கு துவக்கம், தொடர்ந்து பணம் செலுத்தும் பழக்கமே, திருப்பூர் தபால் துறைக்கு விருது கிடைக்க காரணமாக இருந்தது. சேமிப்பு கணக்குகளை மக்கள் துவங்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்க பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் வரவேற்கப்படுகின்றனர்.-------------------------------

தொழில்நுட்ப வளர்ச்சியால்

சேமிப்பு பழக்கம் மேம்பாடு

மோகன்குமார், பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலர்:சேமிப்பு என்பது அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய பழக்கம். வீட்டுக்கு மட்டுமல்லாமல், நாடு பொருளாதார வலிமை பெற சேமிப்பு முக்கியம். நமது சேமிப்பு தான் கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு தேவையான முதலீடாகவும் பயன்படுகிறது.நாட்டின் சேமிப்பில் 54 சதவீதம் வங்கிகளில் தான் உள்ளது. வங்கிகள் தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை கொண்டு தங்கள் வாடிக்கையாளர்கள் எளிதில் முதலீடு செய்யவும், தேவைப்படும் பொழுது திரும்ப பெறவும் 'ஸ்மார்ட் போன்' செயலிகள் மூலம் சேவைகள் கிடைக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளன. சேமிப்பின் மீது கடன் பெற இவை உதவுகின்றன. இதனால், சேமிக்கும் பழக்கம் மேம்பட்டுள்ளது.----

பெயரளவுக்கு கணக்கு

மனநிலை மாறிவிட்டது

விஜய ஆனந்த், உதவி பொது மேலாளர், ரெப்கோ வங்கி:

அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்பது பொதுவாகி விட்டதால், தங்களுக்கென பலரும் கணக்கு துவக்குகின்றனர். முன்பு கணக்கு துவங்கினால் போதும் என்ற மனநிலையில் இருந்தவர்; வங்கிக்கடன் பெற குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும். தங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பணம் வேண்டும் என்பதால், வங்கி கணக்கிலும் சேமிப்பு வைத்திருக்கின்றனர். சேமிப்பு பழக்கம் இளம் தலைமுறையினரிடம் இன்னமும் வளர வேண்டும். 45 வயதை கடந்த வாடிக்கையாளர்கள் பலர் வங்கி செயல்பாடுகளில், சேமிப்பை தக்க வைப்பதில் இருப்பதால் போல், இளம் தலைமுறையினரும் முனைப்புடன் இருந்தால், ஒவ்வொருவரின் பொருளாதாரமும் மேம்படும்; இக்கட்டான சூழல்களை சமாளிக்க முடியும்.

விஜய ஆனந்த், உதவி பொது மேலாளர், ரெப்கோ வங்கி:

அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்பது பொதுவாகி விட்டதால், தங்களுக்கென பலரும் கணக்கு துவக்குகின்றனர். முன்பு கணக்கு துவங்கினால் போதும் என்ற மனநிலையில் இருந்தவர்; வங்கிக்கடன் பெற குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும். தங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பணம் வேண்டும்என்பதால், வங்கி கணக்கிலும் சேமிப்பு வைத்திருக்கின்றனர்.

சேமிப்பு பழக்கம் இளம் தலைமுறையினரிடம் இன்னமும் வளர வேண்டும். 45 வயதை கடந்த வாடிக்கையாளர்கள் பலர் வங்கி செயல்பாடுகளில், சேமிப்பை தக்க வைப்பதைபோல், இளம் தலைமுறையினரும் முனைப்புடன் இருந்தால்,ஒவ்வொருவரின் பொருளாதாரமும் மேம்படும்; இக்கட்டான சூழல்களை சமாளிக்க முடியும்.

உமா மகேஸ்வரி, ஆலத்துார்:

பள்ளி - வங்கி இணைந்து துவங்கிய சேமிப்பு திட்டத்தில் இணைந்து, துவக்கப்பள்ளி முடிக்கும் முன்பே மகன் கிருஷ்ணா, 25 ஆயிரம் ரூபாய் சேர்த்தான்; பிறந்த நாள் அன்பளிப்பு, தினசரி வழங்கும் தொகையை சேர்த்து வைப்பான். செல்வமகன் சேமிப்பு திட்டத்தில் கணக்கு துவக்கி அதில் அத்தொகையை டிபாசிட் செய்துள்ளேன். மகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு துவங்கினேன். உயர்படிப்புக்கு அத்தொகை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். ஆகையால், அவர்களிடம் தொடர்ந்து சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தி வருகிறேன்.






      Dinamalar
      Follow us