/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி கட்டடம் புதுப்பிப்பு பெற்றோர், மாணவர் மகிழ்ச்சி 'தினமலர்' செய்தி எதிரொலி

ADDED : நவ 14, 2024 04:27 AM

உடுமலை: ஜல்லிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 'தினமலர்' செய்தி எதிரொலியாக வகுப்பறை கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 84 மாணவர்கள் படிக்கின்றனர். இரண்டு ஓட்டு கட்டடங்கள், ஒரு சிமென்ட் மேற்கூரை கொண்ட வகுப்பறை கட்டடமும் பள்ளி வளாகத்தில் உள்ளன.
ஆனால் வகுப்பறையின் மேற்கூரை மிகவும் சிதிலமடைந்து கற்கள் பெயர்ந்து விழுந்து கொண்டிருந்தன. மாணவர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு, வேறு வகுப்பறை கட்டடத்துக்கு மாணவர்கள் மாற்றப்பட்டனர்.
மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், இடப்பற்றாக்குறையும் ஏற்பட்டது. பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென, பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இருப்பினும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. சிதிலமடைந்த பள்ளி கட்டடம் குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
செய்தி எதிரொலியாக, உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில், சிதிலமடைந்த கட்டடத்தை புதுப்பிப்பதற்கு ஒன்றிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தற்போது பணிகளும் முழுமையடைந்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தில் தற்போது மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கிறது. இதனையடுத்து, பள்ளி மேலாண்மைக் குழுவினர், மாணவர்களின் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.