ADDED : பிப் 05, 2024 01:42 AM

அ நிறம் | அளவு
பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களின் வசதிக்காக, கடந்த, 2017 --18ம் ஆண்டு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், 5.70 லட்சம் ரூபாய் செலவில் கழிப்பிடம் கட்டப்பட்டது. ஐந்து ஆண்டுகளே ஆன நிலையில், கழிப்பிடம் கடுமையாக சேதமடைந்து அவல நிலையில் காணப்படுகிறது. கழிப்பிடத்தில் உள்ள உபகரணங்கள் அனைத்தும் உடைத்து எறியப்பட்டுள்ளன.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ''சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
